×

சென்னையில் இருந்து பதட்டமான 150 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

திண்டுக்கல், ஏப். 18: திண்டுக்கல் மாவட்டத்தில் 150 பதட்டமான வாக்குச்சாவடிகளை சென்னையில் இருந்தபடியே வெப்கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மக்களவை, நிலக்கோட்டை சட்டசபை இடைத்தேர்தல்  இன்று நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 150 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என தெரியவந்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தலன்று அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, வாக்குப்பதிவை உண்மையாக கண்காணிக்க வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் வீடியோ போலீசார் மூலம் கண்காணிக்கப்படும். சென்னையில் இருந்தபடியே திண்டுக்கல்லில் நடக்கும் வாக்குப்பதிவை கண்காணிக்கலாம். வாக்குப்பதிவு மையம், உள்அறை, வெளிப்புறமும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : polling stations ,Chennai ,
× RELATED ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி...