×

திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா

திருப்புத்தூர், ஏப்.18: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது.திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் பிரதோஷத்தை யொட்டி நேற்று மாலை திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர், உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தன. திருத்தளிநாதரும் சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்புறத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் ஏராமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Pradosha Festival ,Thiruthilinathar Swamy Temple ,
× RELATED சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு