×

விளைநிலங்களை நாசப்படுத்தும் கருவேல மரங்கள் அடியோடு அழிக்கப்படுமா?

பரமக்குடி, ஏப்.18: ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக வறண்ட நிலையில் காணப்படுகிறது. கிடைக்கும் குறைந்த அளவு மழையை சேமிப்பதற்குறிய கண்மாய்கள், வரத்து கால்வாய், ஊரணிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து வைகை நீர்த்தேக்கங்களும் கருவேல் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்களை சில காலகெடுவுக்குள் அழிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதின் அடிப்படையில் வேகமாக கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.ஆனால் அதற்கு இடைக்கால தடை பெற்றதால், கருவேல மரங்களை அகற்றும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், அரசு அலுவலகங்கள், விவசாய நிலங்கள், கண்மாய் கரையோரங்கள் என எங்கு பார்த்தாலும் கருவேல மரங்கள் மீண்டும் செளிப்பாக வளர்ந்து காட்சியளிக்கிறது.
மழைநீரை சேமிக்க, கருவேல மரங்களை அடியோடு அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் விவசாய நிலங்களை வீட்டுமனைக்கு விற்று விட்டு நகர்புறங்களில் கூலி வேலை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் செல்லவேண்டியிருக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!