×

கோடை நோய்களை தவிர்க்க குடிநீரை மூடிவைக்க வேண்டும்

சிவகங்கை, ஏப்.18: கோடைகால நோய்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: கோடை காலங்களில் குடிநீரை நீண்ட நாட்களுக்கு பாத்திரங்களில் திறந்த நிலையில் வைத்திருப்பதால் அதில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு, சிக்குன்குனியா நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாத்திரங்கள், குடங்கள், சிமெண்ட் தொட்டிகள் மற்றும் டிரம்களில் உள்ள நீரில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். அனைத்து தொட்டிகளையும் வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோடை காலத்தில் நீரினால் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, டைபாய்டு நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குடிநீர் குழாய்களை உடைத்து நீர் பிடிக்கவோ, குடிக்கவோ கூடாது. குடிநீர் வழங்கும் குழாய்களில் சாக்கடை நீர் கலந்துவிடாமல் இருக்க தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டை, டயர், பிளாஸ்டிக் கப் முதலியவற்றை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்