×

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை பூஜை பெருந்திருவிழா 30ம்தேதி கஞ்சி பூஜையுடன் துவக்கம்

உடன்குடி, ஏப்.18: செட்டியாபத்து ஐந்து வீட்டுசுவாமி கோயில் சித்திரை பூஜை பெருந்திருவிழா 30ம்தேதி இரவு 7மணிக்கு கஞ்சி பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு படகஞ்சி வழங்கப்படும். மே 1ம்தேதி சிறப்பு பூஜையும், இரவு 10மணிக்கு மேக்கட்டி கட்டுதலும் தொடர்ந்து பூஜையும் நடக்கிறது. மே 2ம்தேதி முதல் 5ம்தேதி வரை தினமும் காலை 7.30மணி முதல் இரவு 10மணி வரை முழுநேரமும் சிறப்பு பூஜைகளும், தினமும் சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மே 6ம்தேதி அன்னதானமும், மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜை, 4மணிக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. மே 7ம்தேதி இரவு 7மணிக்கு கும்பாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராதா, அறங்காவலர் குழுத்தலைவர் சீனிவாசன், அறங்காவலர்கள் ஞானேந்திரபிரகாஷ், ராமகிருஷ்ணன், பாஸ்கரன், செந்தில்குமாரி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : house ,Chettiyapattu ,festival ,Swami Temple Chuji Pooja ,Kanji Pooja ,
× RELATED கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்...