×

கோடை வெயில் வறுத்தெடுப்பதால் குலசேகரன்பட்டினம் கோயிலில் தற்காலிக பந்தல் அமைக்கப்படுமா?

உடன்குடி, ஏப்.18: கோடைகோயில் வறுத்தெடுப்பதால் குலசேகரன்பட்டினம் கோயில் முன்பு தற்காலிக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். பத்து நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் போது சுமார் 10லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர். தசரா திருவிழா நாட்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் முன்பு கடந்த சில ஆண்டுகளுக்கு மகாமண்டபம் அமைக்கப்பட்டது. ஆனால் கோயில் முன்பு வண்ணக்கற்கள் பதிக்கப்பட்டுளளது.
தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளது. இதனால் சாதாரணமாகவே பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடிய பின் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கால்களில் செருப்பு அணியாமல் வருவர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பக்தர்களின் வசதிக்காக கோயில் முன்பு தற்காலிக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,Kulasekarapattinam ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...