குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் மாற்றம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து எதிரொலி

வேலூர், ஏப்.18:வேலூர் மக்களவை ெதாகுதிக்கான தேர்தல் ரத்தானதால் 24 பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழு குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் வரையில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர், கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதிகளில் பணியாற்றி வந்த 24 பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்்தனர்.

Tags : assembly constituencies ,Ambur ,Gudiyatham ,Standing Committees ,Vellore Lok Sabha ,
× RELATED 13 பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு:...