×

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம் 22ம் தேதி தொடக்கம்

வேலூர், ஏப்.18: வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் வரும் 22ம் தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், வேதியியல், கணினி அறிவியல், பி.காம், பிபிஏ உள்ளிட்ட 12 இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன. 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான 12 இளங்கலை பட்டப்படிப்புகளில் 984 சீட்டுகளுக்கான விண்ணப்பம் வினியோகம் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ₹50, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பப்பதிவு கட்டணம் ₹2 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் சுகிர்த ராணி ஜூலினா தெரிவித்தார்.

Tags : Vellore Muthurangam ,Government Arts College ,
× RELATED வேலூர் முத்துரங்கம் அரசு...