×

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நடமாடும் கண்காணிப்பு குழுவும் அமைப்பு

திருவண்ணாமலை, ஏப்.18: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடமாடும் கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,717 வாக்குச்சாவடிகள், ஆரணி மக்களவைத் தொகுதியில் 1,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் 242 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 3 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, எதிர்பாராமல் ஏற்படும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த 192 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், திருவண்ணாமலை தொகுதியில் 448 வாக்குச்சாவடிகள், ஆரணி ெதாகுதியில் 532 வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 980 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்தல், அத்துமீறல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், எஸ்பி சிபிசக்ரவர்த்தி தலைமையில், 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags : Police Security Monitoring Group ,Gunfire Police Station ,Thiruvannamalai ,Arani ,
× RELATED பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி