×

நடிகர் கார்த்திக்கிற்கு எதிராக வாட்ஸ் அப்பில் அவதூறு அமமுக பிரமுகர் மீது வழக்கு


நாங்குநேரி,  ஏப். 17:  நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கார்த்திக், கடந்த 12ம்தேதி இரவு  நாங்குநேரிக்கு வருவதாக தகவல் பரவியது.
அது உறுதி செய்யப்படாத நிலையில் கார்த்திக் அம்பாசமுத்திரத்திற்கு சென்று விட்டதால் நாங்குநேரி  பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அமமுக ஆதரவாளரான மறுகால்குறிச்சியைச் சேர்ந்த தெய்வநாயகம் மகன்  நல்லக்கண்ணு (எ) கண்ணன் (29), கார்த்திக்கிற்கு எதிராக வாட்ஸ்அப்பில் அவதூறு  பரப்பியதாக மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான  வானமாலை (39) என்பவர் நாங்குநேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நாங்குநேரி எஸ்ஐ ஞானராஜன் வழக்குப் பதிந்து கண்ணனைத்  தேடி வருகிறார்.



Tags : Karthik ,slander ,Amma ,
× RELATED பூசாரி பாலியல் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு