×

கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்திட திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களிக்க வேண்டும் சாத்தான்குளத்தில் முன்னாள் எம்.பி. ஜெயதுரை பேச்சு

ஏரல், ஏப்.17: கல்விக் கடன் மற்றும் விவசாய கடன்களை அரசு ரத்து செய்திட தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்திட வேண்டும் என சாத்தான்குளத்தில் முன்னாள் எம்.பி. ஜெயதுரை பிரசாரம் செய்தார்.தூத்துக்குடி தொகுதி முன்னாள் எம்.பி. ஜெயதுரை, தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;  தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. அப்போது தேர்தல் வாக்குறுதியான கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். திமுக ஆட்சியின்போது பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்போடு தான் உள்ளது. ஆகையால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற வேண்டும் என்றால் திமுக ஆட்சியால் தான் முடியும். ஆகையால் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கனிமொழியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

இதில் திமுக நகர செயலாளர் இளங்கோ, முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில் ஆறுமுகபாண்டியன், நகர பொருளாளர் சந்திரன், வார்டு செயலாளர்கள் டேனியல், பெருமாள், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், ஊராட்சி செயலாளர்கள் ராஜபாண்டி, ஜெயராஜ், ராஜேஷ், வியாபாரிகள் சங்கம் பொருளாளர் மதுரம் செல்வராஜ், மதிமுக அமைப்பாளர் ஜெயராஜ், தொண்டரணி ஆறுமுகம், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சங்கர், கூட்டுறவு சங்கம் துணை தலைவர் அலெக்ஸ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Candidate ,Agriculture Debt Candidate ,DMK ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்