×

249வது பிறந்தநாள் விழா வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு வேட்பாளர்கள் மரியாதை

ஓட்டப்பிடாரம், ஏப்.17: ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் 249வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக வேட்பாளர் கனிமொழி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்தனர்.வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு சார்பில் கோவில்பட்டி ஆர்டிஓ அமுதா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் மலர்தேவன், செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சுந்தரலிங்கம் நகர் கிராம மக்கள் நேரடி வாரிசு பொன்ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தி மாலை அணிவித்தனர் அதன்பின் மாநில எஸ்சி எஸ்டி ஆணைய துணைத்தலைவர் முருகன், புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் பாபு மனோகரன் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர் மதியம் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையா, ஒன்றிய மாணவரணி நிர்வாகி அம்பேத்கர், ஆதிதிராவிடர் அணி சுகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்ட பலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு வீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டது. அதேபோல் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிட்டங்கியை நிர்மூலமாக்கி உயிர்நீத்த மாவீரன் சுந்தரலிங்கம் தபால் தலை வெளியீடு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் சுந்தர்ராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்கள் சுடலைமணி, முத்துசாமி உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு தூத்துக்குடி மக்களவை சுயேச்சை வேட்பாளர்கள் சுபாஷினி மள்ளத்தியர், பார்வதி அம்மாள் உள்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் அதன் தலைவர் முருகன் தலைமையில் ஓட்டப்பிடாரம் பஸ் நிலையத்திலிருந்து கவர்னகிரி மணிமண்டபம் வரை ஊர்வலமாக நினைவு ஜோதி எடுத்து வந்தனர்.    கோவில்பட்டி: கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மெயின்ரோடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு திமுக நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், மாணவரணி துணை அமைப்பாளர் மயில்கர்ணன், மாரீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி, கனகராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.     மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, நகர செயலாளர் பால்ராஜ், இளைஞரணி செயலாளர் லவராஜா, வனராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    பா.ம.க. மாநில துணை பொதுசெயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில துணை அமைப்பு தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணை செயலாளர் மாடசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், மாநில இளைஞரணி துணைத்தலைவர் மகாராஜன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.  பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்புராஜ் தலைமையில் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ராஜையா, மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமாகா மாவட்ட இளைஞரணி தலைவர் கனி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், மார்க்சிஸ்ட்  நகர செயலாளர் முருகன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில வழக்கறிஞரணி நிர்வாகி பெஞ்சமின் பிராங்களின், நகர செயலாளர் கருப்பசாமிபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். சுந்தரலிங்கனார் தேவேந்திரனார் கோவில்பட்டி வட்டாரம் சார்பிலும் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Tags : Sundaralingam ,birthday party ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...