×

முடிஞ்சு போச்சு தேர்தல் பிரசாரம்... கூட்டம் சேர்க்க இனி அழைக்க மாட்டார்கள்... டெல்டாவில் சத்தமின்றி வெறிச்சோடிய நகரம், கிராமங்கள்

தமிழகம்  முழுவதும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்ததால் ெடல்டா மாவட்டங்களில்  வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை எங்கும் கேட்காமல் சத்தமின்றி நகர  வீதிகள், கிராம ங்கள் வெறிச்சோடியது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை  தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை (18ம் தேதி) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல் பட்டது. டெல்டா  மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்கு சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து  கொடுப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடை பெற்றது.
கடந்த மார்ச் 26ம்  தேதி வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னர், அனைத்து வேட்பாளர்கள் சார்பில்  நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஒவ்வொரு  வேட்பாளர்கள் சார்பில் மைக்செட் கட்டி பிரசாரம் செய்ய வாகனங்களுக்கு  தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றனர்.

முறைப்படி அனுமதி பெற்றவுடன்  அந்தந்த வேட்பாளர்கள் சார்ந்த கட்சி, கட்சியின் தலைவர், வேட்பாளரின்  சின்னம் உள்ளிட்டவை சொல்லி ஆடியோ பதிவு செய்து ஸ்பீக்கரில் பேசவிட்டுக்  கொண்டு தெரு, தெருவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நல்ல பேச்சாளர்களை  கொண்டு மைக்கில் பேசியபடி பிரசாரம் செய்தனர். வாக்காள பெருமக்களே வருகிற  பொது தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம், வெற்றி யின் சின்னம்  என்று பேசியபடி சென்று கொண்டிருந்தனர். சில நேரங்களில் ஒரே இடத்தில் 2  வேட்பாளர்கள் பற்றிய பிரசாரமும் இடம் பெற்றது. நகரம் மற்றும் கிராமங்களில்  பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், மக்கள் அதிகம்  குடியிருக்கும் பகுதிகள், கிராம பகுதிகள் என அனைத்து பகுதி களிலும் கடந்த  25 நாட்களாக வாக்காளே பெருமக்களே என்ற வார்தை ஒலிக்காத இடமே இல்லை என்று  சொல்லும் அளவிற்கு பிரசாரம் நடை பெற்றது. இந்நிலையில் நேற்று மாலை 6  மணியுடன் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால்  வேட்பாளர்கள், அவர் சார்ந்த கட்சியின் நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட  முடியாது. இதனால் நேற்று மாலையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் நகரம்  மற்றும் கிராமங்களில் எந்த பகுதியிலும் வாக்காள பெருமக்களே என்று வார்த்தை  ஒலிக்காமல் வெறிச் சோடியது காண முடிந்தது.

Tags : meeting ,towns ,villages ,delta city ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...