பூம்புகாரை சுற்றுலா தலமாக மாற்றுவேன் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் உறுதி

கும்பகோணம், ஏப். 17:  என்னை வெற்றி பெற வைத்தால் பூம்புகாரை சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்று மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி உறுதியளித்தார்.மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஆசைமணி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2 வாரமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கும்பகோணம் நகர பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆசைமணி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், பூம்புகாரில் மரைன் கல்லூரி அமைக்கப்படும். கடற்கரையோரம் உள்ள கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். பூம்புகாரை சுற்றுலா தலமாக மாற்றுவேன்.மேலும் மற்றவர்களை போல், மேடையில் நின்று கொண்டு பேசுபவன் அல்ல. மேடையில் பேசியதை செய்து காட்டுபவன். நான் வெற்றி பெற்றால் மயிலாடுதுறை தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்றார்.

Related Stories:

More
>