×

காரைக்கால் நெடுங்காட்டில் இறுதிகட்ட சோதனையில் 700 லிட்டர் சாராயம் பறிமுதல்

காரைக்கால், ஏப்.17: காரைக்காலில் இறுதிகட்ட சோதனையில், நெடுங்காட்டில்ரூ.2.70 லட்சம் மதிப்பிலான 700 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.மக்களவை தேர்தலையொட்டி, ஏப்ரல் 16 முதல் 18ம் தேதி வரை கள்,  சாராயக்கடை, மதுபானக் கடைகள் மற்றும் ஓட்டல்களில் இயங்கும் மது கூடங்களுக்கு விடுமுறை விடவேண்டும் என, மாவட்ட கலால் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த 3 நாட்களில் மது விற்பனையை தடை செய்யும் நோக்கில், மாவட்ட காவல் துறை மற்றும் கலால் துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் நெடுங்காடு குளக்குடி கிராமத்தில், வாய்க்கால் ஓரம் கோரைப்புல் நடுவே சாராயக் கேன்கள் பதுக்கி வைத்திருப்பதாக எஸ்ஐ பிரவீன்குமார் தலைமையிலான சிறப்பு காவல் படையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, சிறப்பு காவல்படை ஆய்வாளர் மரியகிறிஸ்டின் பால், எஸ்.ஐ பிரவீன்குமார் உள்ளிட்ட போலீசார் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தபோது,  கோரைப்புல் புதருக்கிடையே 10 கேன்களில் 100 மி.லி பாக்கெட்டுகள் என சுமார் 700 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை கைப்பற்றிய போலீசார், நெடுங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 3 நாட்கள் கடை விடுமுறை என்பதால், கள்ளத்தனமாக வியாபாரத்துக்காக இவை பதுக்கிவைத்திருக்கக் கூடும் அல்லது தேர்தல் சமயமாக உள்ளதால் வாக்காளர்களுக்கு விநியோகத்துக்காகக் கூட இருக்கலாம் என கூறப்படுவதால், போலீசார், சாராயத்தை பதுக்கிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : examination ,Karaikal ,
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...