×

தொண்டு நிறுவனங்களின் சேவையை அங்கீகரிக்க வேண்டும் கூட்டமைப்பு வலியுறுத்தல்

குளித்தலை, ஏப்.17: மக்களவை   தேர்தலில் போட்டியிடும் அகில இந்திய மாநில அரசியல் கட்சிகளுக்கு, தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்ட அமைப்பின் தலைவர்  கிராமியம் டாக்டர்  நாராயணன் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:  தொண்டு நிறுவனங்கள் அடித்தட்டு மக்களின் முழுமையான பங்கேற்பை ஒருங்கிணைத்து அரசாங்க வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களை  செயல்படுத்துப்படுவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. இந்தப் பணியில் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஏனெனில் தனியார் வசம் ஒப்படைக்கும் போது அரசின் நல திட்ட பயன்கள் முழுவதுமாக மக்களிடம் சென்றடைவதில் பல்வேறு குறைகளும் தடைகளும் உள்ளன.   இதுவே அரசின் நற்பெயரைப் குறைக்கும் நிலை உள்ளது. எனவே இவைகளைக் கருத்தில் கொண்டு….  இந்தியாவின் ஒரு புதிய அரசைத் தோ்வு செய்வதற்கான 2019 பாராளுமன்றத்  தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தொண்டு நிறுவனங்களின் சேவைகளை அங்கீகாிக்கவும், ஆதரிக்கவும் வேண்டும்  என அதில்  குறிப்பிட்டுள்ளார்.


Tags : Federation ,organizations ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்