×

சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் சிதிலமடைந்த புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

கரூர், ஏப். 17: கரூர் சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் இருந்து மதுரை பைபாஸ் சாலை, பெரியார் வளைவு, பெரியாண்டாங்கோயில் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாக செல்கிறது. கரூர் நகராட்சியில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும் பகுதிச்சாலைகளில் இந்த சாலையும் ஒன்று. இந்த சாலையில் அண்ணாநகர் வளைவு அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.பின்னர், இந்த மையம் மூடப்பட்டு, தற்போது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, வாகன போக்குவரத்து நடைபெறும் முக்கிய சாலையாகவும், முக்கியமான பைபாஸ் சாலைக்கு செல்லும் சாலையோரம் உள்ள இந்த புறக்காவல் நிலையத்தை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Tags : outposts ,Andangango ,area ,
× RELATED வீட்டு உபயோகத்துக்கான மானியமற்ற காஸ்...