×

கரூர் ராமானுஜம் நகரில் கட்டப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி விரைந்து முடிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப். 17: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட கோவை சாலையின் பின்புறம் ராமானுஜம் நகர் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், அண்ணாநகர் போன்ற பல்வேறு தெருக்களும் இந்த பகுதியை சுற்றிலும் அமைந்துள்ளன. காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நகராட்சி பகுதியில் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜம் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் தீவிரம் காரணமாக, கடந்த ஒரு சில மாதங்களாக இந்த பகுதியில் மேல்நிலைதொட்டி கட்டும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மேல்நிலைதொட்டி அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Karur Ramanujam ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...