×

வாழப்பாடி அருகே அமமுக பிரமுகர் வீட்டில் பறக்கும்படை சோதனை

வாழப்பாடி, ஏப்.17:  வாழப்பாடி அருகே அமமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். அமமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பொறுப்பு வகித்து வரும் இவரது தோட்டத்து வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கூடுதல் பறக்கும்படை அலுவலர் ராமதாஸ் தலைமையில் சிங்கிபுரம் கிராம உதவியாளர் ராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்குள்ள மாட்டுக்கொட்டகை, ஆட்டுக்கொட்டகை உள்ளிட்ட இடங்களில் படுதாவை விலக்கி பார்த்து பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர். மேலும், பைக் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் இருக்கைகளுக்கு அடியில் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டனர். ஆனால், பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, பறக்கும்படையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ammukan ,living room ,home ,
× RELATED அதிகாரிக்கு வந்த மர்ம இமெயில் உள்துறை...