×

பாலக்கோடு பகுதியில் புதிய நீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படும்

தர்மபுரி, ஏப்.17: பாலக்கோடு பகுதியில் வேளாண்மை சாகுபடியில், சிறந்து விளங்க புதிய நீர்பாசனத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் பிரசாரம் செய்தார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார். திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாலக்கோடு பேரூராட்சி மற்றும் தர்மபுரி நகராட்சி பகுதியான மதிகோன்பாளையம், கோட்டை, புரோக்கர் ஆபீஸ் பஸ் ஸ்டாப், சந்தைபேட்டை, திருப்பத்தூர் சாலை, தர்மபுரி நான்கு ரோட்டில் பிரசாத்தை முடித்துக்கொண்டார். தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமார் பேசுகையில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும். பாலக்கோடு பகுதியில் வேளாண்மை சாகுபடியில், சிறந்து விளங்க புதிய நீர்பாசனத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாலக்கோடு பேரூராட்சி அனைத்து பகுதியிலும் குடிநீர், சாலைகள், கழிப்பிடம், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்வேன். இளைஞர்கள், மகளிர் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், புதிய தொழிற்சாலைகள் உருவாக முயற்சிகள் எடுப்பேன் என்றார்.

Tags : area ,Balakode ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...