தாரமங்கலம் பகுதியில் திமுக இளைஞரணி வாக்குசேகரிப்பு

மேச்சேரி, ஏப்.17: தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய பகுதியில் திமுக இளைஞரணியினர் வாக்கு சேகரித்தனர். சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் பகுதியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சரவணன் தலைமையில் சிலம்பரசன், மதி, செந்தில் உள்பட 100க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தனர். புளியமரத்துகாடு, முரம்புக்காடு, மல்லங்காடு, மேட்டுக்காடு, கோனகாப்பாடி, ஆத்திகாட்டானூர், நாயக்கர் தெரு, கேஆர் தொப்பூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.

Related Stories: