×

ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா

பரமத்திவேலூர், ஏப்.17: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள ஆர்.என் ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் கோடை விடுமுறையில் கல்வி சுற்றுலாவாகவும், சர்வதேச அனுபவத்தை பெறும் வகையில் மலேசியாவிற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சுற்றுலாவில் பள்ளியை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர். சுற்றுலா சென்ற மாணவர்கள் பள்ளியில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் மலேசியா சென்றனர். மலேசியாவில் இரட்டை கோபுரம், மலேசிய பார்லிமென்ட், பிரசித்தி பெற்ற முருகன் கோவில், மலேசிய பிரதம மந்திரி அலுவலகம், உயர்நீதிமன்றம், அரசர்கள் மாளிகை, சுதந்திர தேவியின் உருவச் சிலை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும், அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள கல்விமுறைகள் குறிந்து அறிந்தனர். இதுகுறித்து பள்ளி தலைவர் ராஜா கூறுகையில், இப்பள்ளி மாணவர்கள் படிப்பு, விளையாட்டுக்களில் மட்டுமல்லாது பன்முகத் திறமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறினார். இச்சுற்றுலாவில் பள்ளி தலைவர் ராஜா, தாளாளர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் ரம்யா, தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : RN ,Oxford School Students Travel ,Malaysia ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து