×

சேந்தமங்கலத்தில் திமுக கூட்டணியினர் இறுதிகட்ட பிரசாரம்

சேந்தமங்கலம், ஏப்.17: சேந்தமங்கலத்தில்  திமுக கூட்டணியினர் மேளதாளத்துடன் வீதி வீதியாக சென்று இறுதிகட்ட பிரசாரத்தில்  ஈடுபட்டனர்.   
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில்  கொமதேக வேட்பாளர் சின்ராஜ் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து சேந்தமங்கலம் பேரூராட்சியில் மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சி மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேற்று மாலை  மேளதாளத்துடன் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாவட்ட திமுக இளைஞரணி  அமைப்பாளர் ராஜேஸ்குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர  செயலாளர் தனபாலன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி  நிர்வாகிகள் தேர்தல் பணிமனையிலிருந்து காந்திபுரம், ஜங்லாபுரம்,  கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோடு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.  அப்போது, திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை  அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்தனர். இதில், கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, இளைஞரணி துணை  அமைப்பாளர் கதிர்வேல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஷ்வா உள்ளிட்ட கூட்டணி  கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,alliance ,campaign ,Senthamangalam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி