×

சேந்தமங்கலம் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

சேந்தமங்கலம், ஏப்.17: சேந்தமங்கலம் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேந்தமங்கலம், கொல்லிமலை, புதுச்சத்திரம் புதன்சந்தை, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. 10 மாத கிழங்கு கடந்த ஆண்டு அதிக விலைக்கு விற்பனையானது. இதனால் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் மரவள்ளி கிழங்கை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையக்கூடிய மரவள்ளிக்கிழங்கு ஆத்தூர், செல்லப்பம்பட்டி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு, ஜவ்வரிசி தயாரிக்க விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிழங்கில் ஸ்டார்ச்  பாய்ண்ட் எவ்வளவு உள்ளது என்று அளவுகோல் மூலம் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மரவள்ளி கிழங்கு விலை மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது முள்ளுவாடி கிழங்கு டன் ₹11580 எனவும், குங்கும ரோஸ் கிழங்கு ₹11860 எனவும் விலை உயர்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அறுவடை முடிந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.

Tags : area ,Senthamangalam ,
× RELATED சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்