×

கடும் கோடை வெயிலில் நிழற்குடை இல்லாமல் தவிக்கும் பயணிகள்

காரைக்குடி, ஏப். 17: காரைக்குடி பகுதியில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் அவதிப்படும் அவலநிலை உள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் காரைக்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கையோ மக்கள் தொகையை விட அதிகரித்து வருகிறது. நகராட்சி வளர்ச்சி அடைந்து வந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளது.

முக்கிய பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இரண்டாம் பீட், கொப்புடைய அம்மன் கோயில், வாட்டர் டேங்க், ராஜீவ் காந்தி சிலை அருகே, மகர் நோன்பு திடல், பல்கலைக்கழக வளாகம் பகுதிகளில் செல்லும் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். ஆனால் அப்பகுதிகளில் பல வருடங்களாக நிழற்குடை இல்லை. கடும் வெயிலால் தற்போது அம்மை உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்று வெயிலில் காத்திருப்பதால் நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

எனவே இதுபோன்ற இடங்களை கண்டறிந்து நிழற்குடை கட்டித்தர வேண்டும். பல கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நகராட்சி நிர்வாகம், சில லட்சங்களில் முடிக்க வேண்டிய நிழற்குடை போன்றவைகளில் கவனம் செலுத்தாது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே போதிய நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்தால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதோடு, மன உளைச்சலும் நீங்கும்.

Tags : Travelers ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை