×

போதியளவு தண்ணீர் கிடைக்கல... மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் ெபாதுமக்கள் வலியுறுத்தல்

தொண்டி, ஏப்.17: தொண்டி புதுக்குடி பகுதியில் அதிகமானோர் வசித்து வருவதால், பேரூராட்சி வழங்கும் குடிதண்ணீர் போதிய அளவு கிடைக்க வில்லை. அதனால் இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு புதுக்குடி பகுதியாகும். இங்கு இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பேரூராட்சி மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவு கிடைப்பதில்லை. அதனால் பெரும்பாலும் இப்பகுதி மக்கள் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இந்நிலையை போக்க இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டினால், அதில் நீரை நிரைப்பி போதிய அளவு கொடுக்கலாம். அதனால் பேருராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகாரித்துள்ளது. எங்களால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி செலவு செய்ய முடியாது. எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது, மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் வழங்காததால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நீர்த்தேக்க தொட்டி கட்டி அதில் தேக்கி போதிய அளவு தண்ணீர் வழங்கலாம். லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதால் அதிக செலவு ஏற்படுகிறது. இதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : tap water reservoir ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை