×

மாயமான சலூன் கடை ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு

கூடுவாஞ்சேரி, ஏப். 17: ஊரப்பாக்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன, சலூன் கடை ஊழியர் நேற்று விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மோகன் (35). சலூன் கடை ஊழியர். இவரது மனைவி கோமதி (28). இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். மோகன் கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மோகன் கடந்த 14ம் தேதி மாலை தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி, தனது உறவினர்கள், நண்பர்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அரை பற்றி எந்த தகவலும் இல்லை.

இதனையடுத்து, கோமதி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மோகனை தேடி வந்தனர். இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் மிதப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கிணத்தில் இருந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். மேலும், கோமதியை வரவழைத்தனர். அவர், சடலமாக கிடந்தது மோகன் என உறுதி செய்தார்.இதைதொடர்ந்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் மோகன் தற்கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.

Tags : Recovery ,well ,saloon shop employee ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை