×

40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்

நாகர்கோவில், ஏப். 17: நாகர்கோவிலில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்  நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும். பல இடங்களில் அ.தி.மு.க.வினர் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுக்கின்றனர். அதையெல்லாம் மீறி 40 தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும். இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசிக்கொண்டிருக்கிறது. அதே வேளையில் ராகுல் ஆதரவு அலை வீசிக்கொண்டிருக்கிறது. கருப்புப்பணத்தை மீட்டுவந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ₹15 லட்சம் கொடுப்பதாகவும், 2 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
 விவசாய பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை கிடைக்கும் என்றார். ஆனால் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பேன் என்றார். நாகர்கோவில் ஸ்மார்ட் சிட்டி, தொழில்பூங்கா, சாய் சப் சென்டர், விவசாய கல்லூரி கொண்டு வருவேன் என்றவர் கொண்டு வரவில்லை. தனி ரயில்வே கோட்டம் அமைப்பேன் என்பது போன்ற எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. குமரி மாவட்டத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர் வளர்ச்சியை கொண்டு தருவார். வளமான நல்ல திட்டங்களை கொண்டு வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகில இந்திய விவசாய பிரிவு துணைத்தலைவர் ராமசுப்பு கூறியதாவது: மோடி மாடல் என்று கூறினார். இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு தொழில்களை முன்னேற்றுவோம் என்றவர் மக்களுக்கு எதிரான ஆட்சி செய்தார். நான் என்று தன்னை முன்னிலைப்படுத்த பல கோடி ரூபாய் விளம்பரத்திற்கு செலவு செய்துள்ளார். வெளிநாடு செல்ல ₹2010 கோடி செலவு செய்துள்ளார். வருடத்திற்கு 2 லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. விவசாய திட்டங்கள் மூலம் 4 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை மக்கள் பாதித்தார்கள். பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று நாட்டின் முன்னேற்றம் சரிந்துவிட்டது. மன்மோகன் ஆட்சியில் 8.5 சதவிகிதம் வளர்ச்சி விகிதம் இருந்தது. இன்று நீதிமன்றம் உட்பட அனைத்து துறைகளிலும் அரசு தலையீடு செய்துள்ளது. மோடி  வெளிநாடுகளுக்கு பயணம் சென்றதால் எந்த பலனும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.வேல்துரை கூறியதாவது: ஜி.எஸ்.டி.யால் மக்களை வதைக்கிறார்கள். காஸ் விலை 950 ரூபாய் ஆகிவிட்டது. யாரிடமும் லஞ்சம் வாங்குவதில்லை என கூறுகிறார்கள். ஆனால் பெரு முதலாளிகளிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ேபட்டியின்போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தயாபரன், காமராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : coalition ,constituencies ,
× RELATED தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும்...