×

வசந்தகுமார் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வது உறுதி

தென்தாமரைக்குளம், ஏப். 17 :  சாமிதோப்பு அன்பு வன நிறுவனர் பால பிரஜாபதி அடிகளார் நிருபர்களிடம் கூறியதாவது :  மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தலுக்கு பிறகு முக்கிய மாற்றம் ஏற்படும். வர்த்தக துறைமுகம் வருவது சிலருடைய சுயலாபத்துக்காக மட்டுமே தவிர, மக்களுக்கு எந்த பயனும் தராது. மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். முதலில் இங்கு தொழில் வளர்ச்சி காண வேண்டும். அப்படி இருந்தால்தான் வர்த்தக துறைமுகம் தேவைப்படும். ஆனால் தொழில் வளர்ச்சி இல்லாதபோது துறைமுகம் வந்து என்ன பயன்?கன்னியாகுமரிக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. ஏற்கனவே மிக குறுகிய பகுதியாக குமரி மாவட்டம் உள்ளது. இதில் துறைமுகம் வரும்போது நாமெல்லாம் கண்டிப்பாக மூழ்கி போவோம். ஓகி புயலின்போது சாமிதோப்பு முதல் சுசீந்திரம் வரை தண்ணீரால் மூழ்கி பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனவே எங்களை சார்ந்த நண்பர்கள், பக்தர்கள் அனைவரும் மத்தியில் ராகுல் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வர்த்தக துறைமுகத்தை நாங்கள் எதிர்த்தபோது எங்களை ஒடுக்க பார்த்தார்கள்.ஜெயலலிதா எங்களது தலைமைப்பதிக்கு முழு ஆதரவு தருவதாக கூறினார். ஆனால் தற்போதைய தமிழக அரசு எங்களை ஏமாற்றி விட்டது. வரும் மக்களவை தேர்தல் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அப்போது எங்கள் பதி தொடர்பான பிரச்னைகள் எல்லாவற்றிலும் முழுமையான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

கன்னியாகுமரி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வசந்தகுமார் உள்ளூரில் பிறந்து வளர்ந்தவர். கஷ்டப்பட்டு உழைத்து உயர்ந்தவர். அவர் எல்லா சமூகத்துக்கும் பாரபட்சமின்றி உதவி புரியும் மனிதர். எனவே அவர் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இளைஞர் காங்கிரசார் வாக்கு சேகரிப்பு சாமியார்மடம், ஏப். 17:  கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் சார்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜாய்மோன், நிர்வாகிகள் கிறிஸ்டல் ஜெகமோன், மத்தியாஸ், விஜயகுமார், கிறிஸ்டோபர், செல்வகுமார் திமுகவை சேர்ந்த மணி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஜனநாயகம் காக்க கை சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்
நாகர்கோவில், ஏப்.17: ஜனநாயகத்தை காக்க கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் இறுதிகட்ட பிரசாரம் செய்தார்.கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் முளகுமூடு பகுதியில் இருந்து நேற்று காலையில் தனது நிறைவு நாள் தேர்தல் பிரசார சுற்று பயணத்தை தொடங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது: வெற்றி கனியை பறிப்பது நமது கையில் உள்ளது. கை ஒன்றுதான் வளமான பாரதத்தை தரும். மோடி நாட்டில் இருந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து. நாம் ஜனநாயகத்தை காக்க கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும்.  வியாபாரிகள் நிம்மதியாக வாழ கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  பெண்களுக்கு மாதம் 6 ஆயிரம், வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கின்ற ராகுல்காந்தியின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மக்களிடம் எடுத்து செல்வோம், வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  பின்னர் பயணம், உண்ணாமலைக்கடை, சிராயன்குழி, பள்ளியாடி, கல்லுக்கூட்டம், முளங்குழி, முன்சிறை, கீழ் பம்மம், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது எம்.எல்.ஏ பிரின்ஸ், பொருளாளர் யூசுப்கான் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Vasanthakumar ,Parliament ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...