×

திருவிடைமருதூர் பகுதியில் மயிலாடுதுறை மக்களவை ெதாகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கும்பகோணம், ஏப். 17:  திருவிடைமருதூர் பகுதியில் மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம் வாக்கு சேகரித்தார்.மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம், மலையப்பநல்லூர் ஊராட்சி, சிவபுரம் மாதா கோவில் தெருவில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக்கும் தீர்மானத்தை மத்திய அரசு உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க வலியுறுத்தப்படும். உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை அனைத்து நீதிமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த தகுதி வாய்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையின்படி நீதிபதிகளாக நியமிக்கப்பட மத்திய அரசை வலியுறுத்தப்படும்.தகுதிவாய்ந்த தமிழர்களை அயல்நாடுகளில் இந்திய தூதராக நியமிக்க வலியுறுத்தப்படும்.

மத்திய அரசின் உதவிபெறும் திட்டங்களை முழுமையாக மானிய திட்டங்களை மாற்றி அவற்றுக்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, வங்கிகள், எல்ஐசி போன்றவற்றில் 90 சதவீதத்துக்கும் குறையாமல் அந்தந்த மாநிலங்களில் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் கண்டறியப்பட்டு காலதாமதமில்லாமல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பொருட்களான பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதிகள் அமைக்கப்படும். விவசாயிகளின் கஷ்டத்தை போக்க இலவச மின்சாரம் வழங்கப்படும். மத்திய அரசு பணி நியமனங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தமிழகத்தில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை போல் இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்கு சேகரித்தார். எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Tags : candidate ,Mayiladuthurai Lok Sabha ,DMK ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்