×

மங்கனூர் செபஸ்தியார் ஆலய திருவிழா சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு

தஞ்சை, ஏப். 17: தஞ்சை  அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா வரும் 22ம் தேதி முதல்  24ம் தேதி வரை நடக்கிறது.இதையொட்டி அரசு போக்குவரத்து கழக கும்பகோணம்  கோட்டத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை மங்கனூருக்கு விழா  பேருந்துகளை இரவு, பகல் முழுவதும் இயக்க உள்ளது. தஞ்சை மங்கனூர்,  திருச்சி மங்கனூர், திருக்காட்டுப்பள்ளி மங்கனூர், கந்தர்வக்கோட்டை  மங்கனூர் ஆகிய வழித்தடங்களில் விழா பேருந்துகள் இயக்கப்படவுள்ளத. இவ்வாறு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Madangur Sebastian Temple Festival ,government transport corporation ,
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்