×

தமிழக விழாக்கள் குறித்த தபால் அட்டை வெளியீடு

கோவை, ஏப்,16: கோவை மண்டல தபால்துறை சார்பில் தமிழக விழாக்கள் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் வகையில் தபால் அட்டைகள் நேற்று வெளியிடப்பட்டது. கோவை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மேற்கு மண்டல தபால்துறை இயக்குனர் ராமசாமி தபால் அட்டைகளை வெளியிட்டார். கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தொடர்ந்து மேற்கு மண்டல தபால்துறை இயக்குனர் ராமசாமி பேசியதாவது: தமிழகத்தின் பண்டிகைகளையும் கலாச்சாரத்தையும், பெருமைப்படுத்தவும் மற்ற மாநில மக்கள் அறிந்து கொள்ளும்  நோக்கத்திலும் தபால் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல வெளியிடுவது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.

 தபால் துறையானது கடிதப் பறிமாற்றம் மட்டுமின்றி பாஸ்போர்ட், ஆதார் விண்ணப்பித்தல்,கிராமிய வங்கி, ஆயுள் காப்பீடு, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது. மாணவர்கள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி தேர்வு செய்து மாதம் தலா ரூ.500 வீதம் ஸ்காலர்சிப் வழங்குகிறோம் என்றார்.
 கோவை மண்டல தபால்துறை கண்காணிப்பாளர் சுதிர்கோபால் ஜாக்கிரி பேசுகையில், தைப்பொங்கல், தைப்பூசம்,குண்டம் இறங்குதல், கார்திகை தீபம், நாகூர் தர்கா,வேளாங்கண்ணி உட்பட தமிழக பண்டிகைகள் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 14 தபால் அட்டைகள் தற்போது வெளியிடப்பட்டது. மேலும் இதேபோல புதிய தபால் அட்டைகள் வெளியிட உள்ளோம் என்றார்.

Tags : festivals ,Tamil ,
× RELATED கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம்...