×

பேரூர்செட்டிபாளையம் மாசாணிஅம்மனுக்கு 2 டன் கனி அலங்காரம்

தொண்டாமுத்தூர், ஏப் 16: கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் உபகோயிலான பேரூர் செட்டிபாளையம் மாசாணியம்மன் கோயிலில் சித்திரை முதல் நாளையொட்டி சிறப்பு கனி அலங்காரம் நடந்தது. திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி உட்பட 2 டன் கனிகள் படைக்கப்பட்டு மாசாணியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சச்சிதானந்தம், நடராஜ் தலைமையில் பூஜைகள் நடந்தது.  பேரூர் அருேக செல்லப்பகவுண்டன்புதூர் சக்திபீடம் செல்லாண்டியம்மன் கோயிலில் சிறப்பு ரூபாய் அலங்கார வழிபாடு நடந்தது. ரூ-2 லட்சத்தில் நோட்டுகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அம்மனுக்கு சொர்ண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சக்திபீடம் சுப்பிரமணியஅடிகளார் பக்தர்களுக்கு கனிகள், நாணயங்கள் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கி ஆசி வழங்கினார். விழாவில் இளையபட்டம் ஆறுச்சாமி, ரேவதிரமேஷ்குமார், செந்தில், தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மருதமலை அடிவாரம் வள்ளி அம்மன் கோயிலில் சித்திரை முதல் நாளையொட்டி சிறப்பு கனி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி கனிகள் இடம் பெற்று இருந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி அம்மனை தரிசித்தனர்.மருதமலையில் உள்ள இடும்பன் கோயிலில் தரிசித்து விட்டு முருகபெருமானை வழிபடுவது ஐதீகம். சித்திரை முதல் நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இடும்பனுக்கு அபிசேகம் நடந்தது. விபூதி அலங்காரத்தில் இடும்பன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Tags : Perur Chettipalayam Masani ,
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி