கறம்பக்குடி வடக்கு ஒன்றியத்தில் அமமுக வேட்பாளர் சாருபாலா தீவிர வாக்கு சேகரிப்பு

கறம்பக்குடி, ஏப்.16:  திருச்சி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியத்தில் நேற்று வாக்குகள் சேகரித்தார்.கறம்பக்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள மைலங்கோண்பட்டி, அம்புக்கோவில், பிலாவிடுதி, ராங்கியன்விடுதி, குழந்திறான்பட்டு ,  தீத்தானிவிடுதி, கரம்பவிடுதி, புதுக்கோட்டைவிடுதி, பாப்பாபட்டி, முதலிபட்டி, கிலாங்காடு, கீராத்தூர், ரெகுநாதபுரம், மருதன்கோன்விடுதி, வாண்டான்விடுதி ஆகிய ஊராட்சிகளில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பொதுமக்கள், பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கறம்பக்குடி பகுதி மக்களுக்கு கஜா புயல் பாதிப்பு நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நான் ஆறுதல் கூறினேன். மேலும் கறம்பக்குடி பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, வடிகால் வசதிகள் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தி அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று கூறினார். குறிப்பாக குழந்திரான்பட்டு ஊராட்சியில் பிரசாரம் செய்த போது அங்கு நூறுநாள் திட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொழிலாளர்களிடம் நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று கூறி பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். கறம்பக்குடி வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Samarapala ,Karambukudi North ,
× RELATED சிறைக் கைதிகள் தேர்தலில் வாக்குரிமை...