×

திருச்சி அரசு சித்த மருத்துவமனையில் ஆட்டிசம், வர்ம பிரிவு 2 நாட்கள் செயல்படும் சித்த மருத்துவ அலுவலர் தகவல்

திருச்சி, ஏப்.16:  திருச்சி அரசு சித்த மருத்துவமனையில் ஆட்டிசம் மற்றும் வர்ம சிகிச்சை பிரிவு வாரத்தில் இரண்டு நாட்கள் செயல்படும் என்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் சிறப்பு பிரிவு மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான வர்ம சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் இப்பிரிவுகளில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நான்கு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் இம்மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவுகள் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது.  அனைத்து நோய்களுக்கும் அறுவை மருத்துவம் இல்லாமல் மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆங்கில முறை மருந்துகளை பல்வேறு நோய்களுக்காக எடுப்பவரும் சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி மருத்துவத்தையும் டாக்டரின் அறிவுரை மற்றும் பரிந்துரைகளுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் சகல நோய்களும் கட்டுப்பட்டு முற்றிலும் குணமாகும். ஆட்டிசம் மற்றும் வர்ம சிகிச்சைப் பிரிவு புதன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.  நிர்வாக காரணங்களுக்காக இப்பிரிவு தற்காலிகமாக வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


Tags : Siddha Hospital Atidasam ,Trichy ,Siddha Medical Officer ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...