×

பூத் சிலிப் வாங்க இயலாதோர் அச்சப்பட வேண்டாம் காரைக்கால் கலெக்டர் வேண்டுகோள்

காரைக்கால், ஏப்.16: பூத் சிலிப்புடன் தேர்தல் ஆணையம் சொல்லியுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்றால் மட்டுமே வாக்களிக்க இயலும் என தேர்தல் அதிகாரி விக்ராந்த்ராஜா அறிவித்துள்ளார்.வரும் 18 ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்,  குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரி விக்ராந்த் ராஜா தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின் விக்ராந்த்ராஜா  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 164 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாக்களர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை பூத் சிலிப்புடன் தேர்தல் ஆணையம் சொல்லியுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்றால் மட்டுமே வாக்களிக்க இயலும். பூத் சிலிப் வாங்க இயலாதவர்கள் அது குறித்து அச்சப்பட வேண்டாம். வாக்குச்சாவடியில் அதற்கென உதவி செய்வதற்கு அதிகாரிகள் உள்ளனர் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வாக்குப் பதிவு நாளன்று மாவட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்களும் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம் என்றார்.

Tags : Booth Chilip ,Collector Collector ,
× RELATED தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான...