×

நாமக்கல்லில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

நாமக்கல், ஏப்.16:  நாமக்கல்லில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கரின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மும்பை அர்ஜூன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூடுதல் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் குமணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் நீதிநாயகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, சரவணன்,  நாமக்கல் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் துரை வினோத், நகர துணை செயலாளர் ரகுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ambedkar ,birthday ceremony ,Namakkal ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...