×

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்

ராசிபுரம், ஏப்.16:  தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என ராசிபுரத்தில் நடந்த கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார். ராசிபுரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கொமதேக பொதுசெயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது, ‘திமுக வெற்றிக்கூட்டணி. மத்திய அரசுக்கு எதிராக அலை வீசி வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுகவினர் பாஜவுடனான கூட்டணியை விரும்பவில்லை. தற்போது, அதிமுகவில் இருக்கும் 10 பேர் வழக்கிலிருந்து தப்பித்து கொள்வதற்காக, இந்த கூட்டணி அமைத்துள்ளனர். உண்மையில் அதிமுக, பாமக தொண்டர்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. பாமகவை தடை செய்ய வேண்டுமென ஜெயலலிதா சட்டசபையிலேயே பேசியிருந்தார். அப்படியிருந்தும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். தேர்தல் முடிந்தால், பாஜகவினர் யாரையும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.  நிகழ்ச்சியில் கொமதேக பேரவை தலைவர் தேவராஜன், துணை செயலாளர் நடராஜ், இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, சந்திரசேகர் மற்றும் ஐஜேகே பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags : DMK ,alliance ,win ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி