×

மாமியாரிடம் சண்டையிட்ட இளம்பெண் மாயம்

சேந்தமங்கலம், ஏப்.16: பேளுக்குறிச்சி அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(37). இவரது மனைவி சுதா(33). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சுதாவிற்கும் அவரது மாமியார் லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், சுதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் மாமியார், மருமகள் இடையே சண்டை ஏற்பட்டதால், மனமுடைந்த சுதா வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்காததால், சுதாவின் தாய் ரோஜா பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்சுதா பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுதாவை தேடி வருகின்றனர்.

Tags : magician ,Mamiyar ,
× RELATED கேரளாவில் 2 பெண்கள் நரபலி...