×

பாப்பாரப்பட்டி துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்

பாப்பாரப்பட்டி, ஏப்.16: பாப்பாரப்பட்டி துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பாரப்பட்டியில் துணை சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 டாக்டர்கள், 3 செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த துணை சுகாதார நிலையத்தில், பாப்பாரப்பட்டி, பிக்கிலி, பனைகுளம், கிட்டம்பட்டி, வேப்பிலைஅள்ளி, ஆச்சாரஅள்ளி, மாதேஅள்ளி, பள்ளிப்பட்டி, வேலம்பட்டி ஒன்னப்பகவுண்டனஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி, பாலவாடி போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மாதந்தோறும் 50க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பாப்பாரப்பட்டியை சுற்றியுள்ள 10 ஊராட்சியிலும், 30 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில், பாப்பாரப்பட்டி துணை சுகாதார நிலையம் இன்னும் 10 படுக்கை வசதியுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 2 டாக்டர்களில் ஒரு டாக்டர் விடுப்பில் இருப்பதால், ஒருவர் மட்டுமே பணி செய்து வருகிறார். தினமும் 400 பேர் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாப்பாரப்பட்டி மருத்துவமனையை தரம் உயர்த்தி, 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக்க வேண்டும். மேலும், சுழற்சி முறையில் டாக்டர்கள் 24 மணி நேரம் பணியாற்ற கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா