×

வருசநாடு அருகே மாளிகைப்பாறை கருப்பசாமி கோயிலில் சித்திரை திருவிழா

வருசநாடு, ஏப்.16: வருசநாடு அருகே மாளிகைப்பாறை கருப்பசாமி கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவின் போது ஏராளமான பெண்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர். இதனையொட்டி அன்னதானம் வழங்குதல், முடிகாணிக்கை செலுத்துதல் கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அண்டா, பானைகளில் வைத்து பிடி காசுகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளையும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில் பூசாரி கருப்பசாமி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர் இதுகுறித்து மாளிகைப்பாறை பூசாரி கருப்பசாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மாளிகைப்பாறை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். 2 தலைமுறையாக பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் சிறப்பு யாகபூஜைகள் நடத்தி சதுரகிரி பயணம் மேற்கொண்டு பின்பு எங்கள் கோயில்களில் பெருவிழாவாகக் கொண்டாடுவது வழக்கம் என்றார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாளிகைப்பாறை கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

Tags : festival ,temple ,Muruganpara Kallapasamy ,Vasanadana ,
× RELATED வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம்