×

என்ஐஆர்எப் தரவரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் 28வது இடம் பெற்றுள்ளது துணைவேந்தர் தகவல்

காரைக்குடி, ஏப். 16:  தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் (என்ஐஆர்எப்) தர வரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் 28வது இடம் பெற்றுள்ளது என துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், `` மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தினை அளவிடும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனதிபதி வெளியிட்டார். அழகப்பா பல்கலைக்கழகம் கற்றல், கற்பித்தல் வளங்கள், பட்டதாரிகள் தேர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு, பொது மக்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கருத்து அறிதல் ஆகியவற்றில் அதிகரித்து, சென்ற ஆண்டின் 48.25 புள்ளிகளிருந்து 48.54 புள்ளியாக உயர்ந்துள்ளது. தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலில் தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த அரசு பல்கலைக்கழகங்களில் இப்பல்கலைக்கழகம் 4வது இடம் பெற்றுள்ளது. தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியல் 2019ல் பல்கலைக்கழக பரிவில் 28வது இடத்தையும் அனைத்து நிறுவனங்களின் தர வரிசையில் 47வது இடத்தையும் பெற்றுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் ஆகியோரின் ஒருகிணைந்த உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றார்.

Tags : Vice-Chancellor ,Alappa University ,NIRF ,
× RELATED பெரியார் பல்கலையில் பல்வேறு...