முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்

திருப்புத்தூர், ஏப். 16: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி  முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச்.31ல் முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. . 9ம் திருநாளான நேற்று காலையில் முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. இதில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளையாத்தங்குடி, திருப்புத்தூர், சேவிணிப்பட்டி, கீழச்சிவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், முதலையான்பட்டி, சேத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச்சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Muthuramaniyanam ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்