×

திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவதை காண வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மாநகராட்சி ஏற்பாடு

மதுரை, ஏப். 16: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளையும், அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் ஏப்.19ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த திருவிழாக்களை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறுகையில், ‘மீனாட்சி திருக்கல்யாணத்தை காணவரும் பக்தர்கள் வசதிக்காக சித்திரை வீதிகள், மாசிவீதிகள் உள்ளிட்ட வீதிகளில் 18 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 32 தற்காலிக கழிப்பறைகள், 30 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 132 துப்புரவு தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகராட்சி எல்லையான கடச்சனேந்தல் தொடங்கி வண்டியூர் வரை 78 இடங்களில் குடிநீர் ெதாட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 58 கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களின் கீழ் 1,200 துப்புரவுத் தொழிலாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இது தவிர சுகாதார ஆய்வாளர்கள் 40 பேர், பரப்புரையாளர்கள் 50 பேர், தூய்மைக்காவலர்கள் 25 பேர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரம் பேணுவதற்காக ரூ.45 லட்சம் செலவில் சுண்ணாம்பு 250 டன், ப்ளீச்சிங்பவுடர் 100 டன், பினாயில் 200 லிட்டர் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பேரிகார்டுகள், அழகர் ஆற்றில் இறங்குவதற்காக சறுக்கு பாலம் முதலியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags : Municipal Corporation ,facilities ,Kottayam ,river ,devotees ,Alakar ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்