×

இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது பக்தர்கள் தரிசனம் மின் ரதத்தில் நத்தம் மாரியம்மன் உலா

நத்தம், ஏப்.16: நத்தத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். சித்திரை பிறப்பையொட்டி நேற்று முன்தினம் நத்தம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதைதொடர்ந்து அன்று இரவு சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து நகர் வலம் புறப்பட்டது. இது பெரியகடைவீதி, தெலுங்கர் தெரு, மார்க்கெட் வீதி, காவல் நிலையம், மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் சென்று அங்கிருந்து மூன்றுலாந்தர் வழியாக கோயிலை சென்றடைந்தது. அப்போது ஆங்காங்கே பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பூசாரிகள், இந்து வர்த்தகர்கள் பொதுநலச்சங்கத்தினர் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Campaign ,devotees ,Natham Mariamman ,
× RELATED பாமக 32வது ஆண்டு விழா சட்டமன்ற தேர்தல்...