×

நோய் தாக்கிய நாய்களால் நோய் பரவும் அபாயம்

தேவதானப்பட்டி, ஏப். 16: தேவதானப்பட்டி காட்ரோடு அருகே உள்ள கெங்குவார்பட்டியில் அதிகளவில் நோய் தாக்கிய நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். இதனால் பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தெருக்களில் நோய் தாக்கிய நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் குழந்தைகள் விளையாடும் பகுதியில் சுற்றித்திரிகின்றன. இவற்றின் மூலம் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையில் நோய் தாக்கிய நாய்களால் பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் நோய் தாக்கிய நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்