×

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் ராணுவ வீரர்கள் உயிர் தியாகத்தை வைத்து பாஜ அரசியல்

திண்டுக்கல், ஏப்.16:  திண்டுக்கல் மக்களை தொகுதி  திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நான்குவழிச்சாலை பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்கு பின்பு அதிமுக.வின் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கும்போதெல்லாம்  முப்படைகளை காட்டி ஓட்டு சேகரிக்கிறார். வீரர்கள் சிந்திய ரத்தம் நாட்டிற்கானது. அதை எந்த அரசியல் கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது.

மக்களை காக்கிற ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு ஓட்டு அரசியல் செய்கிறது. பிரதமர் மோடி போர் விமானங்கள் தயாரிப்பது குறித்து எந்தவித அனுபவமும் இல்லாத அனில் அம்பானியை பிரான்சுக்கு அழைத்து சென்று ரூ.1670 கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இதில் அவர்கள்  செய்த ஊழலை ஒரு ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது’’ என்றார். இதில் திமுக  துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : soldiers ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு