×

1,000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா தேரோட்டம்

மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழா பல்லாண்டு காலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மங்கள வாத்தியங்கள் இசைக்க அலங்கரிக்கப்பட்ட 42 அடி உயரமுள்ள தேரை பக்தர்கள் முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து செல்வர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜவீதியில் 3 இடங்களிலும், வடக்கு ராஜவீதியில் 4 இடங்களிலும், தெற்கு ராஜவீதியில் 3 இடங்களிலும் தேர் நிறுத்தப்படும். தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவில் திருவிழாக்களில் தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம், உலக அளவில் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது.  அதிகாலை 4 மணியளவில் பெரிய கோயிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர் கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் மண்டபமான மேலவீதிக்கு வந்து சேரும்.

1,000 ஆண்டுகள் பழமைமிக்க தஞ்சை பெரிய கோவில் ஓர் உலக அதிசயமே. வானளாவிய 216 அடி உயர கோபுரம். பார் போற்றும் 12 அடி உயரமும், 12 டன் எடை கொண்ட பெரிய நந்தி, கோபுர உச்சியில் 81 டன் எடை கொண்ட வட்ட வடிவ சிகரம். 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அற்புத ஓவியங்கள். 6 ஆண்டுகளில் முழுவதும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்ட ஓர் அதிசய கட்டமைப்பு (கிபி 1004- 1010). மாமன்மன் ராஜராஜசோழன் இக்கோயிலை வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் தமிழனின் வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாக வடிவமைத்திருப்பது மிக சிறப்பானது. யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டதே இதன் அறிவியல் கலை மற்றும் பண்பாட்டு மரபியல் சிறப்புகளுக்கு சான்று. தஞ்சையில் உள்ள மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி வழியாக மீண்டும் நிலையை தேர் வந்தடையும். தேர் முன்பு மேளதாளங்கள் மற்றும் தப்பட்டாம், கோலாட்டம் குழுவினர் இசை முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து செல்லும் காட்சி மிக சிறப்பானதாக இருக்கும். இத்தகைய தரணி போற்றும் சிறப்புக்குரிய பெரிய கோயில் தேரோட்டத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களையும் தஞ்சையின் பாரம்பரியமிக்க நிறுவனமான புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சார்பில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

Tags : festival ,Chitta ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...