×

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை, ஏப். 16:  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆர்டிஓ பூங்கோதை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவிஞர் கல்யாணசுந்தரத்தின் மகனும், ஓய்வுபெற்ற செய்தி மக்கள் தொடர்புதுறை கூடுதல் இயக்குனருமான குமரவேல், தஞ்சாவூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, தாசில்தார் அருள்பிரகாசம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.காசாங்குளம் வடகரையில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 90வது பிறந்த நாளையொட்டி கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு துவங்கி விடிய, விடிய நடந்தது.


Tags : Pattukottai Kalyanasundaram ,birthday ,
× RELATED பிறந்தநாள்... இன்று பிறந்தநாள் மக்களை...