×

ராஜகிரி பகுதியில் குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் அவதி

பாபநாசம், ஏப். 16: ராஜகிரியில் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாபநாசம் அடுத்த ராஜகிரி பகுதி உள்ளது. இந்த பகுதியில் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு சாலை கூட தரமானதாக இல்லை. குண்டும், குழியுமாக இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.இந்த ஊரில் ஓடும் வாய்க்கால்கள் தூர்வாராத காரணத்தால் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள், கட்டிட இடிப்பாடுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. தெருவிற்கு தெரு பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பாசன வாய்க்கால்கள் சாக்கடையாக மாறியதாலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல தெருக்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதே நிலையில் தான் பாபநாசம் அடுத்த பண்டாரவாடை ஊராட்சியும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road motorists ,Rajagiri ,area ,
× RELATED பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்